சமுதாய நலக்கூடம் ஏற்படுத்துதல், புதிய பள்ளிவாசல் கட்டுதல், கிராம முன்னேற்றத்திற்கான முயற்சிகளை
மேற்கொள்ளுதல் போன்ற குறிப்பிட்ட பணியை நோக்கமாக கொண்டு வேலை செய்யும்
நிர்வாககுழு ஓய்வு ஆசிரியர் அமானுல்லா அவர்களின் தலைமையில் 10.08.2010 அன்று அமைக்கப்படுகிறது.
18.09.2010 ஒரு மாதமே ஆன நிலையில் நிர்வாகக்குழு நிர்வாகிகளை மாற்றம் செய்யப்பட்டு புதிய தலைவராக முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் அப்துல் ஹக் என்பவர் நியமிக்கப்பட்டார். பள்ளிவாசல் அருகில் உள்ள பழைய பழுதடைந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு, புதிய மண்டபம் கட்டுவதாகவும் முடிவு செய்யப்பட்டது.
இதற்காக பழைய கட்டிடம் அகற்றப்படுகிறது. இதை 10.12.2010 அன்று ஊர் மக்கள் இடிப்பாடுகளை சுத்தம் செய்யும் காட்சி.
15.12.2010 அன்று புதிய சமுதாய நலக்கூடம் அடிக்கல் நாட்டப்படுகிறது.
03.02.2013 அன்று இரண்டாண்டுகளுக்கு பிறகு அல்-ஜன்னத் என்கிற பெயரில் புதிய சமுதாய நலக்கூடம் திறப்பு விழா காண தயாராக உள்ளது.





