பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட விசுவக்குடி கிராமத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக இருந்தது.
இதனால் அந்தப்பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் விசுவக்குடியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டுக்கு அரசு அனுமதி திடீரென ரத்து செய்யப்பட்டது.
இதனால் கோபமுற்ற கிராம மக்கள் அரசு பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.