தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு இரண்டாவது கட்டமாக டிசம்பர் 30ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இதில் அன்னமங்கலம் ஊராட்சி தலைவர் பதவிக்கு பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்டு மருதாம்மாள் செல்வகுமார் வெற்றி பெற்றார். இதற்கான பதவியேற்புவிழா இன்று (ஜனவரி 06, 2020) திங்கட்கிழமை காலை 10 மணிக்கு அன்னமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.











