தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு இரண்டாவது கட்டமாக டிசம்பர் 30ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இதில் அன்னமங்கலம் ஊராட்சியில் உள்ள மொத்தம் 12 ஊராட்சி வார்டுகளுக்கு தேர்தல் நடைப்பெற்றது. இதில் வார்டு எண் இரண்டில் விசுவக்குடி குதரத்துல்லா எனும் வதூத் சங்கு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.



