பெரம்பலூர் மாவட்டம், விசுவக்குடி அரசு தொடக்கப் பள்ளியில் ஜூலை 15 இன்று காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்விற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு நெகமத்துல்லா தலைமை வகித்தார்.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் திருமதி காமிலா, கல்விக்கு கண் திறந்த காமராஜர் அவர்களை பற்றி சிறப்புரையாற்றினார். பின்னர் மாணவ மாணவரிடையே நடத்தபட்ட பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் காமராஜர் அவர்களின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், சிறப்பாசிரியர் அருளானந்தம், ராஜ்குமார், மாற்று திறனாளி மாணவரின் தாய் நஜிமா போன்றோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்புகளும், மதிய உணவாக பொங்கலும் வழங்கப்பட்டது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மாலா ரோஸ்லின் வரவேற்றார். இறுதியாக உதவி ஆசிரியர் பிரான்ஸிஸ் பீட்டர் நன்றி கூறினார்.







