பெரம்பலூர் மாவட்டம், விசுவக்குடியில் அரசு தொடக்கப் பள்ளி இயங்கிவருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர்.
சமீப காலமாக இந்த பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருவது மிகவும் கவலை அளிக்கிறது. தற்போதைய கல்வி ஆண்டில் வெறும் 24 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர்.
இதனிடையே இந்த பள்ளியின் தலைமை ஆசிரியை மாலா ரோஸ்லின் தனியார் பள்ளிகளுக்கு நிகராக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
* கல்வியின் தரத்தை மேம்படுத்தும் விதமாக குறுந்தகடுகள் வழியாக ஆங்கிலம் எழுதவும், பேசவும் பயிற்சி அளிக்கிறோம்.
* விவசாயத்தின் மீது ஆர்வம் ஏற்படும் வகையில் வாழை மற்றும் காய்கறி தோட்டம் அமைத்து மாணவர்களை கொண்டே பராமரிக்க செய்கிறோம்.
* சுற்று சூழலை காக்கும் விதமாக பள்ளி வளாகத்தில் ஏராளமான மரங்களை வளர்த்து வருகிறோம்.
* மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் விதமாக அறிவியல் கண்காட்சிகளையும் நடத்தி வருகிறோம்.
* சமையல் கூடம், கழிப்பறை, சுற்றுசுவர் என உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி உள்ளோம்.
* RO Water Plant முறையில் மாணவர்களுக்கு சுத்திகரிக்கபட்ட குடிநீர் வழங்கி வருகிறோம்.
* குடியரசு தினம், சுதந்திர தினம் என அனைத்து விழாக்களையும் தவறாமல் நடத்தி வருகிறோம்.
இதுபோன்ற முயற்சிகளால் இப்பள்ளி மாணவர்கள் வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் தங்களின் செயல் திறனை நிரூபித்து பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற்று வருகின்றனர்.
மேலும் பள்ளியில் மதியம் சத்துணவு வழங்கப்படுகிறது. விலையில்லாமல் சீருடைகளும், புத்தகங்களும் அரசால் வழங்கப்படுகிறது.
தனியார் பள்ளிகளின் மீது மோகம் கொண்டு உங்களின் பொருளாதரத்தை வீணடிக்க வேண்டாம். எனவே மாணவர்களை விசுவக்குடி அரசு தொடக்கப் பள்ளியில் சேர்த்து இப்பள்ளியின் வளர்ச்சிக்கு ஆதரவு தருமாறு இப்பகுதி மக்களை கேட்டு கொண்டார்.








