பின்னர் அருகில் உள்ள வழிபாட்டு தளமான விசுவக்வகுடி தக்வா பள்ளிவாசலுக்கும் அழைத்து வரப்பட்டனர். வழிப்பாட்டு தளம் என்றால் உருவமும், கற்சிலைகளும் என பார்த்து பழகிய அவர்கள் பள்ளிவாசலில் உருவம் இல்லாமல், சிலைகள் இல்லாமல் இருந்ததை கண்டு வியந்தனர்.
மேலும் பள்ளிவாசலில் அமர்ந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மனதை ஒருநிலைப்படுத்தும் விதமாக தியானத்தில் ஈடுபட்டனர்.
தியானத்திற்குப் பிறகு பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாக முஸ்லிம்களின் இறைவேதம் திருக்குர்ஆன் என்றும், அதில் முதன் முதலில் இறக்கப்பட்ட திருகுர்ஆன் வசனம் படிப்பீராக... ஓதுவீராக... என்பதுதான். எனவே மாணவர்கள் நல்ல முறையில் படித்து வாழ்க்கையில் உயர வேண்டும் என விளக்கம் அளிக்கப்பட்டது.
அப்போது பள்ளிவாசல் நிர்வாகத்தின் தலைவர் இப்றாகீம் அவர்கள் மற்றும் அல் அமீன் சங்க இளைஞர்கள் உடன் இருந்தனர்.
பின்னர் பள்ளி சிறுவர், சிறுமியர்கள் மகிழ்ச்சியாக திரும்பி சென்றனர்.
video 👇
video 👆


