மே 14, 2017

தோமையார் ஆலய 71 ஆம் ஆண்டு விழா


பெரம்பலூர் மாவட்டம், அன்னமங்கலம் கிராமத்தில் தோமையார் ஆலயத்தின் 71ஆம் ஆண்டுவிழா நடைபெற்று வருகிறது.

இதனால் தேவாலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கபட்டு இரவில் வண்ணஒளி சிந்தியது.

தேவாலயத்தின் முன்புறம் வரிசையாக தயார் நிலையில் இருந்த சப்பரங்கள் சனி இரவு 10 மணிக்கு ஆடம்பர பவனி வந்தது. இதை ஆயிர கணக்கானோர் கண்டுகளித்தனர்.

இவ்விழாவின் ஒரு பகுதியாக சிறப்பு திருப்பலி, நற்கருணை ஆசிர்வாதம் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.

கடந்த 5ஆம் தேதி வெள்ளி கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழா இன்று ஞாயிற்று கிழமை மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது.

இதனால் அன்னமங்கலம் கிராமமே விழா கோலம் பூண்டுள்ளது.
Previous Post
Next Post

post written by: