மார்ச் 06, 2017

விசுவக்குடியில் தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு



பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி திங்கள் கிழமை குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது. இதில் விசுவக்குடியில் BSNL தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்க வேண்டி தமுமுக மாவட்ட செயலாளர் குதரத்துல்லா அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் பின் வருமாறு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே விசுவக்குடி, முகமது பட்டினம், பிள்ளையார் பாளையம் போன்ற கிராமங்கள் உள்ளது. சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசித்து வரும் இந்த கிராமங்களில் எந்த ஒரு தொலைத் தொடர்பு கோபுரங்களும் இல்லை.

அருகில் இருக்கும் ஊரான அன்னமங்கலத்தில் உள்ள தொலைத் தொடர்பு கோபுரத்தில் இருந்து வரும் சமிக்ஞைகள் சீரானதாக இல்லை. இதனால் பேசுவதும், கேட்பதும் தெளிவாக இல்லாததால் தகவல்கள் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.

அவசரமான நேரங்களில் உறவினர்களோடும், நண்பர்களோடும் பேசுவதற்கு கூட மிகவும் சிரமபட்டு வருகிறோம். போதிய அளவு சமிக்ஞை இல்லாததால் இரவு நேரங்களில் கூட வீட்டைவிட்டு வெளியே வரவேண்டிய நிலை உள்ளது.
இதன் காரணமாக மருத்துவம், திருமணம் போன்ற பணிகளில் அலைச்சலும், காலதாமதமும் ஏற்படுவதால் அலைபேசி பயனர்கள் ஆகிய நாங்கள் பெரும் சிக்கல்களை சந்தித்து வருகிறோம்.

நவீன காலமாக மாறிவரும் இந்த சூழ்நிலையில், வெளியுலக தொடர்புக்கு அலைபேசிகள் மிகவும் அவசிய தேவையாக உள்ளது.

எனவே எங்கள் கோரிக்கையை ஏற்று அரசின் தொலைத் தொடர்பு (BSNL) கோபுரத்தை விசுவக்குடியில் அமைத்து கொடுத்து உதவி செய்து தருமாறு அனைத்து மக்களின் சார்பாக மாவட்ட ஆட்சியர் உங்களிடம் கேட்டு கொள்கிறோம்
Previous Post
Next Post

post written by: