பெரம்பலூர் மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் விசுவக்குடி கிளை சார்பாக 07 ஏப்ரல் அன்று சமுதாய விழிப்புணர்வு பொதுக் கூட்டம் நடைப்பெற்றது.
காசிம் புலவர் திடலில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தை இர்ஷாதுல் உலூம் அரபு கல்லூரியின் முதல்வர் மௌலான மௌலவி
இஹ்சானுல்லாஹ் பாஜில் பாகவி தலைமையில் நடைப்பெற்றது.
இஹ்சானுல்லாஹ் பாஜில் பாகவி தலைமையில் நடைப்பெற்றது.
மறுமை சிந்தனை என்ற தலைப்பில் தலைமை கழக பேச்சாளர் கோவை சகோ.ஜாகிர் அவர்களும், இஸ்லாம் காட்டும் சமூக நல்லிணக்கம் என்ற தலைப்பில் மாநில செயலாளர் பேராசிரியர் முனைவர் கவிஞர் ஹாஜா கனி அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கலந்து கொண்டனர்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டது.
1. வி.களத்தூரில் நடந்த சம்பவத்திற்காக அப்பாவி பொதுமக்களை கைது செய்த காவல் துறையை வன்மையாக கண்டிக்கிறோம்.
2. முதலமைச்சர் அவர்களின் தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தது போல் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தரவேண்டும்.
3. தமுமுக வின் நீண்ட நாள் கோரிக்கையான பெரம்பலூர் மாவட்டத்திற்கு தனியாக தலைமை ஹாஜி நியமிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் தமுமுக போராட்டங்களை அறிவிக்கும்.
4. மின் பயணீட்டு அளவைக் குறிக்கும் போது அதற்கான தொகையும் வசூல் செய்து வீட்டிலேயே ரசீது கொடுக்கும் முறையில் தமிழக அரசு நடைமுறைப் படுத்த வேண்டும்.ஆகிய தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது.
செய்தி மற்றும் புகைப்படம் : ச.முஹம்மது யாசீன், கலீலுர் ரஹ்மான்
கடந்த முறை நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தின்
வீடியோ காட்சிகள்: 07-03-2012
வீடியோ காட்சிகள்: 07-03-2012
