பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே விசுவக்குடி கிராமம் உள்ளது. இங்குள்ள ராபியா, அப்துல் பாரி, ஆபிதா பேகம் மற்றும் ஷகிலா பீபி ஆகியோருக்கு சொந்தமாக சுமார் 70 ஆடுகள் உள்ளது. இவைகளை தினமும் மாலை 3 மணியளவில் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று (26) மாலை மேய்ச்சலில் இருந்தபோது சுமார் 4 மணியளவில் இவர்களுக்கு சொந்தமான 11ஆடுகள் ஒன்றன்பின் ஒன்றாக திடீரென செத்து மடிந்தன. ஆசையாய் வளர்த்த ஆடுகள் இப்படி திடீரென இறந்ததை கண்டு அதிர்ச்சியில் அழுது கவலையடைந்தனர். இதனால் இந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டடுள்ளது.
ஆடுகள் உயிரிழந்தது குறித்து காரணம் அறிய சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதிமக்களின் கோரிக்கையாக உள்ளது.







