பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் ஊராட்சியில் உள்ள விசுவக்குடியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது.
இன்று பிப்ரவரி 20ம் தேதி புதன் கிழமை பள்ளியில் கல்வி சீர்விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி மாணவர்கள், ஊர் பொது மக்கள் முன்னிலையில் நடைப்பெற்ற இந்நிகழ்வை பள்ளியின் தலைமை ஆசிரியர் மாலா ரோஸ்லின் தலைமை ஏற்று நடத்தினார்.
இதில் இலவசமாக பள்ளியின் வளர்ச்சிகாக மேஜை, நாற்காலி, பீரோ, விளையாட்டு உபகரணங்கள்... போன்றவற்றை ஊர்வலமாக எடுத்துவந்து பொதுமக்கள் வழங்கினர்.
இந்நிகழ்வில் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் பிரான்ஸிஸ் பீட்டர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அ.நெகமத்துல்லா, கிராம கல்வி குழு தலைவர் காமீலா பேகம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குதரத்துல்லா, விசுவக்குடி ஜமாத் தலைவர் காதர் அலி, அம்பேத்கர் இளைஞர் குழு சாமிதுரை, முன்னாள் வார்டு உறுப்பினர் மருதை, அல் அமீன் இளைஞர் நற்பணி மன்ற உறுப்பினர்கள், அனைத்து மகளிர் குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.



