படங்கள், செய்திகள் : தௌ.மு.ஜகரிய்யா
![]() |
குவைத்தில் நூற்றுக்கும் அதிகமான விசுவக்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒரு குழு அமைத்து மாதம் ஒருமுறை சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்.
குவைத் மிர்காப் பகுதியில் நேற்று வெள்ளி (06.01.2012) அன்று நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியில் விசுவக்குடியில் புதிய வழிபாட்டுதலம் அமைப்பது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த குழுவின் தலைவர் முஹம்மது மீராஷா விசுவக்குடி முன்னேற்றத்திற்கு குவைத்தில் வசிக்கும் விசுவக்குடி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். சுமார் 50க்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் அனைவருக்கும் விருந்து வழங்கி உபசரிக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவர் குவைத் தமிழ் இசுலாமிய சங்கத்தின் (K-TIC)தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் புகைப்படங்களை காண : https://www.facebook.com/visvakudipost
மேலும் புகைப்படங்களை காண : https://www.facebook.com/visvakudipost

